திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது கொடூர தாக்குதல்...! புத்தாண்டு நாளில் மும்பையில் இளம்பெண்ணால் பேரதிர்ச்சி...!
Brutal attack boyfriend who refused marriage young woman causes major shock Mumbai New Years Day
மும்பை சாந்தாகுரூஸ் கிழக்கு பகுதியில் உள்ள கலினா – ஜம்லிபாடா பகுதியில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
42 வயதுடைய நபரும், 25 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், அந்த நபர் தொடர்ந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒன்றாகக் கழிக்கலாம் எனக் கூறி, அந்த பெண் காதலனை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதனை ஏற்று அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இருவரும் தனியாக இருந்த போது, மீண்டும் திருமண விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கூட அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த நபர், கடும் வலியுடன் இருந்தபோதிலும் தைரியமாக அங்கிருந்து தப்பித்து, உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த சகோதரர், அவரை மீட்டு வி.என்.தேசாய் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அந்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும், பாரதிய நியாய சன்கிதா சட்டத்தின் கீழ், ஆபத்தான ஆயுதம் கொண்டு காயம் விளைவித்தல், உயிருக்கு மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தாண்டு மகிழ்ச்சி ஒரு நொடியில் பேரதிர்ச்சியாக மாறிய இந்த சம்பவம், மும்பை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brutal attack boyfriend who refused marriage young woman causes major shock Mumbai New Years Day