இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி விவகாரத்தில்... வெளியான இறுதி முடிவு...!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து  விலகுகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் அவர்கள் தாமாக எடுத்த முடிவு அறிவிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை இங்கிலாந்தில் ஏற்படுத்தியது.

அவர்களின் எதிர்கால நிலை குறித்து விவாதிக்க ராணி இரண்டாம் எலிசபெத் நேற்றுமுன்தினம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இளவரசர் ஹாரி, மேகன், வில்லியம், இளவரசர் சார்லசுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் மேகனை தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.

மேகன் கனடாவிலிருந்து தொலைபேசி வழியாக கருத்து தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத் வெளியிட்ட அறிக்கையில், "அரச குடும்ப உறுப்பினர்களின் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது.

ஹாரியும், மேகனும் கனடாவிலும் இங்கிலாந்திலும் மாறிமாறி தங்களுடைய காலத்தை கழிக்க முடிவு எடுக்கப்பட்டது. நானும் என்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒரு இளம் குடும்பமாக ஹாரியும், மேகனும் புதிய வாழ்க்கையைத் துவங்கும் விருப்பத்திற்கு முழு ஆதரவை கொடுக்கிறோம்.

அவர்கள் அரச குடும்பத்தில் முழுநேர பணி உறுப்பினர்களாக இருப்பதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ஆனால், அவர்கள் குடும்பத்தின் மதிப்புமிக்க அங்கமாக தொடர்வதும், சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். புரிந்து கொள்கிறோம்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harry megan problem solved by elizabeth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->