திருமதி.சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
Happy birthday wishes to Mrs Sunitha Williams
இன்று பிறந்தநாள் காணும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை திருமதி.சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்தார்.
1987-ல் அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இவர் 2 ஆண்டுகளில் கடற்படை விமானியானார்.
2006ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார். அப்பொழுது இவர் பகவத்கீதை, விநாயகர் சிலை, கொஞ்சம் சமோசாக்களை விண்வெளிக்கு எடுத்துச்சென்றார்.
விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் சுனிதா. அங்கு இருந்தபடியே வானொலியில் பேசினார். விண்வெளியில் ஓடிக்கொண்டே தனது தலைமுடியை கத்தரித்தார். பிறகு, லாக்ஸ் ஆப் லவ் அமைப்புக்கு அதை வழங்கினார்.

இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை' திரு.விஷ்ணு நாராயண் பாத்கண்டே அவர்கள் நினைவு தினம்!.
விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkhande ; ஆகஸ்ட் 10, 1860 – செப்டம்பர் 19, 1936) இந்திய இசைவாணரும், இந்துஸ்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். ராகா, ராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் ராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார்.
ராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை ரகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
English Summary
Happy birthday wishes to Mrs Sunitha Williams