வெளியானது ரெட்ட தல படத்தின் கண்ணம்மா பாடல்.!!
retta thala movie kannama song released
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவருடன் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ‘ரெட்ட தல’ படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், ‘ரெட்ட தல’ படத்தின் ‘கண்ணம்மா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கண்ணம்மா பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
English Summary
retta thala movie kannama song released