ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி..காசா போர் முடிவுக்கு வருமா? மீண்டும் அதிராகத்தை பயன்படுத்திய அமெரிக்கா!
UN resolution fails Will the Gaza war come to an end? America uses shock and awe again
காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது.
2023ம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய நகரங்களை தாக்கி சுமார் 1,200 பேரை கொன்றனர். அதுமட்டுமல்லாமல் 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்கவும், அவர்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கவும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல கட்டங்களாகப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட போதும், இன்னும் 50 பேர் வரை ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்து, இஸ்ரேலின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை தொடக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது வரை 80 சதவீத காசா பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகருக்குள் தரை வழியாக ஊடுருவி முன்னேறி வருவதால் பாலஸ்தீனியர்கள் காசா நகரை காலி செய்து கால்நடையாகவும், வாகனங்கள் மூலமாகவும் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள்.
இந்தநிலையில், காசாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்தது.
English Summary
UN resolution fails Will the Gaza war come to an end? America uses shock and awe again