2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவாரா..? பெருகும் ஆதரவு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த 2024 அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பிடம் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்த போதிலும், 2028-ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளில் மற்ற தலைவர்களை விட ஒரு படி முன்னால் அவருக்கு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நியூயார்க்கில் இந்த வாரம் நடைபெற்ற 'நேஷனல் ஆக்ஷன் நெட்வொர்க்' மாநாட்டில் பங்கேற்ற கமலா ஹாரிஸ் பங்கேற்றார். அங்கு கருப்பின வாக்காளர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த மாநாட்டில் உரையாற்றிய போது, கூட்டத்தில் இருந்தவர்கள் "மீண்டும் போட்டியிடுங்கள்" என முழக்கமிட்டனர். 

அதற்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ், "நான் அதைப் பற்றி யோசித்து வருகிறேன், மீண்டும் போட்டியிடலாம்" என வெளிப்படையாகவே தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அதேப்போன்று மற்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்களை விட அமெரிக்கா முழுவதும் கமலா ஹாரிஸ் நன்கு அறியப்பட்டவராக இருப்பது அவருக்குப் பெரும் சாதகமாக நிலை உள்ளது.

இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸுடன் 2028-இல் போட்டியிட வாய்ப்புள்ள மேலும் பல முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது டொனால்ட் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகள், குறிப்பாக ஈரான் போர் மற்றும் அமெரிக்காவின் பாரம்பரியக் கூட்டணிகளை அவர் கையாளும் விதம் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், அமெரிக்கப் பொருளாதாரத்தை டிரம்ப் கையாளுவது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கமலா ஹாரிஸ் 2028 குறித்துப் பேசினாலும், வெஸ் மூர் மற்றும் ரூபன் காலேகோ போன்ற மற்ற தலைவர்கள், தற்போது வரவிருக்கும் 2026 இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியை வெற்றி பெறச் செய்வதே தங்களின் முதல் கடமை எனத் தெரிவித்துள்ளனர்.

வரும் 2026-இல் வெற்றி பெற்றால் மட்டுமே 2028-ஐப் பற்றிப் பேச முடியும் என அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளனர். இருப்பினும், தற்போதைய சூழலில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களிடையே கமலா ஹாரிஸ் ஒரு பலமான வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Growing Support for Kamala Harris to Run in the 2028 US Presidential Election


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->