மதரஸாக்களுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி; ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் வடக்கு வங்காளத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என பிரதமர் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மேற்குவங்கம் மாநிலத்தில் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது மதரஸாக்களுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், வடக்கு வங்காளத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சிலிகுரியில் பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தனது சொந்த சிறப்பு வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதில் இரவும் பகலும் மும்முரமாக ஈடுபடுவதாக சாடியுள்ளார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் தடுப்பதாகவும், மதரஸாக்களுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள திரிணாமுல் காங்கிரஸ், வடக்கு வங்காளத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பெர்ஹாம்பூர் தொகுதி  காங்கிரஸ் வேட்பாளர் அதிர் ரஞ்சன் சௌத்ரி, எஸ்.ஐ.ஆர். பணிகளை முறையாக செயல்படுத்தவில்லை என தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டினார்.

நேர்மையான வாக்காளர் பட்டியல்கள் இல்லாமல், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் சாத்தியமில்லை என்றும் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Prime Minister alleges that the Trinamool Congress has not allocated sufficient funds to North Bengal


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->