தங்கம் விலை ரூ.1.80 லட்சம் வரை உயரும்! 2026ல் உலக பொருளாதார நெருக்கடி!2026ல் பூமிக்கு வரும் ஏலியன்..!பாபா வங்கா கணிப்பு!
Gold price will rise up to Rs1 lakh 80 thousand Global economic crisis in 2026 Alien to come to Earth in 2026 Baba Vanga prediction
உலகளவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில், தற்போது சிறிதளவு சரிவைச் சந்தித்து வருகிறது. ஆனாலும், இதற்கிடையில் பிரபல தீர்க்கதரிசன நிபுணர் பாபா வங்காவின் 2026 கணிப்பு மீண்டும் உலகம் முழுவதும் பேச்சு பொருளாகியுள்ளது.
அவரது தீர்க்கதரிசனத்தின் படி, 2026 ஆம் ஆண்டு உலகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கப்போகிறது. இதனால் “Cash Crash” என்ற நிலை உருவாகி, பணத்தின் மதிப்பு சரிவதோடு வங்கி அமைப்புகள் மற்றும் பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
“அந்த நேரத்தில் தங்கமே மனிதர்களின் ஒரே நம்பிக்கையான சொத்து ஆகும்,” என பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் எச்சரிக்கிறது.
இந்தியாவில் தற்போது 10 கிராம் தங்கம் ரூ.1.23 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் தங்க விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதன்படி, 10 கிராம் தங்கம் ரூ.1.62 லட்சம் முதல் ரூ.1.82 லட்சம் வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதி மந்தநிலை, பணவீக்கம், சர்வதேச அரசியல் மோதல்கள் ஆகியவை தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளன. இதனால் விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் தங்கம் வாங்கத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பாபா வங்கா தனது தீர்க்கதரிசனத்தில் இதையும் கூறியுள்ளார் —“2026ல் ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே பெரிய போர் வெடிக்கும். அதில் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் உலகளவில் வலுவான தலைவராக எழுவார்.”
அதோடு, 2026 நவம்பரில் மனிதர்கள் வெளி கிரக வாசிகளுடன் முதல் முறையாக தொடர்பு கொள்ளுவர் என்றும் அவர் கணித்துள்ளார்!
பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, பார்வையற்றவளாக இருந்தபோதும் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தவர் என உலகம் அறிந்தது. சீனாவின் வளர்ச்சி, இளவரசி டயானாவின் மரணம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போன்ற பல விஷயங்களை முன்னதாகவே கணித்தவர் என்றும் கூறப்படுகிறது.
அதனால், நிதி நெருக்கடி வரும் நேரத்தில் தங்கமே மீண்டும் மனிதர்களின் நம்பிக்கையான முதலீடாக மாறும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Gold price will rise up to Rs1 lakh 80 thousand Global economic crisis in 2026 Alien to come to Earth in 2026 Baba Vanga prediction