சட்ட விரோதமாக செயல்பட்ட தங்க சுரங்கத்தில் விபத்து: 15 தொழிலாளர்கள் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் தங்க சுரங்கத்தில் திடீரென ஒரு பாதி இடிந்து விழுந்தது. 

இதில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர். 

இருப்பினும் இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில தங்கச் சுரங்கத்தின் இடுக்குகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold mine collapse 15 killed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->