உலக பணக்காரர்களின் பட்டியல்! இந்தியாவின் கவுதம் அதானி ஐந்தாவது இடம்.! - Seithipunal
Seithipunal


உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி ஐந்தாவது இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

இதன்படி இந்த ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்டு அர்னால்ட் மூன்றாம் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸ் 4-ஆம் இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 370 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gautam adani becomes fifth richest person


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->