வங்கதேசத்தில் வெறிச்செயல்: ஹிந்து கோவில் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய இஸ்லாமிய கும்பல்..!
Gang vandalizes Hindu temple statues in Bangladesh
வங்கதேசத்தில் ஹிந்து கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில், கோவிலில் இருந்த 07 சிலைகள் சேதம் அடைந்துள்ளன. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர், பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. ஹிந்து கோவில்கள் இடிக்கப்படுவதும், ஹிந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.
அந்நாட்டில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தற்போது ஆட்சியில் உள்ளது. அரசிடம் ஹிந்து கோவில்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மத்திய அரசு பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது. ஆனாலும், இது குறைந்தபாடில்லை.

இந்நிலையில், ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியத்தில் கோவிலில் இருந்த 07 சிலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. நவராத்திரி துர்கா பூஜைக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாகத் ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு பெரும் நிலவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் கூறுகையில், ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஷிம்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ஹபிபுர் ரஹ்மான் என்பவரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோவிலில் சிலைகள் சேதம் அடைந்து கிடக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஹிந்து கோவிலை சேதப்படுத்தி வரும் சம்பவத்திற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
English Summary
Gang vandalizes Hindu temple statues in Bangladesh