அதிர்ச்சி.. இனி GOOGLE PAY செயலி பயன்படாது - அதிரடி காட்டிய கூகுள் நிறுவனம்.!
g pay app close google company info
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக உள்ள கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிகளவில் பயனர்களைக் கொண்ட இந்த GPAY செயலியை ஜூன் 4, 2024 முதல் Google நிறுவனம் மூடப் போகிறது.

இந்தச் செய்தியை கூகுள் நிறுவனமே தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.
கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Wallet-க்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
English Summary
g pay app close google company info