இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றும் முடியாத அவல நிலை.. பல கிலோமீட்டர் வரிசையில் காத்திருக்கும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு தீர்ந்ததால், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பி வருகிறது. ஆனாலும், எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு காத்திருக்கும் போது உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. 

பல மாதங்களாக நீடித்து வரும் எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணாத அரசுக்கு எதிராக போராட்டங்கள் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fuel issue for Sri Lanka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->