போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் - பிரான்ஸ் அதிபர் - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், பாரிஸ் திரும்பிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போரில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் போரில் ரஷ்யா தோற்கடிக்கப்படுவதை விரும்பினாலும், தோல்வியால் ரஷ்யா நசுக்கப்படுவதை தான் பார்க்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். போரில் உக்ரைன் பின்வாங்காமல் தனது உறுதியான நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளிக்கும் ராணுவ ஆதரவை மேலும் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

France president desires to Russia to be defeated in war


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->