ஒரே கல்லில் ஆன 18 அடி உயரத்தில் பிரமாண்ட காளி சிலை.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் பைன்ஸ்லானா பகுதியில் 30 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட பளிங்குக் கல்லில் ஜெய்பூரைச் சேர்ந்த சிற்பி முகேஷ் பரத்வாஜ் 18 அடி உயரத்தில் காளி சிலையை வடிவமைத்துள்ளார். இந்தச் சிலை, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு கோயிலில் நிறுவப்பட உள்ளது. இது தொடர்பாக பௌர்ணமிகாவு கோயிலின் தலைமை அறங்காவலர் எம்.எஸ்.புவனசந்திரன் தெரிவித்ததாவது:

"ராஜஸ்தானில் இருந்து காளி, துர்கை, லட்சுமி ஆகிய மூன்று சிலைகள் கேரளத்துக்கு வர உள்ளன. அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவைப் போன்று கேரளத்தின் திருவனந்தபுரம், வெங்கன்னூர் பகுதியில் உள்ள கோயிலில் இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன என்றுத் தெரிவித்துள்ளார்.

இந்த சிலைகள் தங்களின் வாகனங்களான சிங்கம், புலி, மயில், அன்னப்பறவை உள்ளிட்ட சிலைகளுடன் ஜெய்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாலை மார்க்கமாக அனுப்பிவைக்கப்பட உள்ளன. பால திரிபுரசுந்தரி தேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பௌர்ணமிகாவு கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய பஞ்சமுக கணேசர் சிலையும் 51 அக்ஷர தேவதைகளின் சிலைகளும் அமைந்துள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eighteen feet kali statue in kerala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->