பிரான்ஸ் சுற்றுலா விமானம் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பிரான்சில் சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு பிரான்சில் உள்ள கிரெனோபில் அருகே உள்ள வெர்சௌட் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் சுற்றுலா விமானம் ஒன்று 5 பேருடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு 60 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது விமானத்தில் எரிந்த இடிபாடுகளுடன் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தையின் உடல்களை கண்டுபிடித்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

France picnic aircraft crashed


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->