லஞ்சப் பணத்தில் சொகுசு வாழ்க்கை...! அரசு அதிகாரி வீட்டில் நள்ளிரவு அதிரடி வேட்டை...! - பறிமுதல் செய்யப்பட்ட கோடிகள்...! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் உள்ள சத்ரி கானா பகுதியைச் சேர்ந்த நரஹரி ராவ், நிலம் மற்றும் நில அளவைத்துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவரிடம் வருமானத்திற்கு மீறிய அளவில் பெரும் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கி, நரஹரி ராவ், அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமான 11 இடங்களில் நேற்று காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அவரது படுக்கையறையில் இருந்த பீரோவின் அடிப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருந்த 5 சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை திறந்து ஆய்வு செய்தபோது, கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் நோட்டுகள் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.1.54 கோடி ரொக்கம் இருப்பது உறுதியானது.இதுமட்டுமின்றி, பீரோவில் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் ஐதராபாத் நகரின் முக்கிய புறநகர் பகுதிகளில் வாங்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைகள் மற்றும் நிலச் சொத்துகளுக்கான ஆவணங்களும் சிக்கின. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து நரஹரி ராவின் வங்கி லாக்கர் திறந்து ஆய்வு செய்யப்பட்டபோது, அதில் ரூ.2.29 கோடி ரொக்கப் பணமும், ரூ.5.04 கோடி மதிப்பிலான நிலையான வைப்புத் தொகைகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.மேலும் அவரது மனைவியின் பெயரில் கூடுதலாக இரண்டு வங்கி லாக்கர்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த லாக்கர்களை திறந்து சோதனை மேற்கொள்ள காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளில் பரிவர்த்தனைகள் நடைபெறாமல் இருக்க அவற்றை முடக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

luxurious life bribe money midnight raid government official house Crores seized


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->