கடாபியிடம் காசு வாங்கிய பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோஸி சிறையில் அடைப்பு..!
Former French President Nicolas Sarkozy jailed for accepting money from Gaddafi
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய நாடான பிரான்ஸின் அதிபராக இருந்தவர் 70 வயதான நிகோலஸ் சர்கோஸி. இவர், 2007-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு அப்போதைய லிபியா அதிபர் கடாபியிடமிருந்து நிதி பெற்றதாகவும், அதற்காக வேறு சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும், அரசியல் நோக்கம் கொண்டவை என்று சர்கோஸி மறுத்து வந்தார். ஆனால், கடாபியிடம் சர்கோஸி தரப்பினர் கடாபியிடம் பணம் பெற்றதை, கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அதிபர் சர்கோஸி மீதான சதித்திட்ட குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதோடு, அவருக்கு 05 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 21) பாரிசில் உள்ள லா சாண்டி சிறையில் நிகோலஸ் சர்கோஸி அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோஸி தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர், இத்தகைய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நிகோலஸ் சர்கோஸி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Former French President Nicolas Sarkozy jailed for accepting money from Gaddafi