சொந்த ஊர்களுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் நாளை கரூர் வருகை: சூடுபிடிக்கவிருக்கும் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டெம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பில் ஈட்டப்பட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பில் சிபிஐ விசாரணை நடத்த கடந்த 13-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் கடந்த 17-ஆம் தேதி அதிகாலை கரூர் வந்தனர். இந்த குழுவினரிடம் எஸ்ஐடி குழுவினர் வழக்கு ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர்.

கரூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதியில் சிபிஐ குழுவினர் முகாமிட்டுள்ளனர். பின்னர், கடந்த 18-ஆம் தேதி மாலை சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்திற்கு அவர்கள் காரில் வந்து,0 5 நிமிடம் காருக்குள் இருந்தபடியே அந்த இடத்தை பார்வையிட்டதோடு யாரிடமும் விசாரிக்காமல் மீண்டும் பயணியர் விடுதிக்கு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் பயணியர் விடுதியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலரை வரவழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தீபாவளியை கொண்டாட சிபிஐ அதிகாரிகள், கடந்த 19-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று இரவு அல்லது நாளை காலை கரூர் வர இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் குறித்த வழக்கு விசாரணை தொடங்கி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The investigation is set to heat up as CBI officials who have returned to their hometowns visit Karur tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->