ஆரஞ்சு அலர்ட் : சென்னையில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு, கடலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
Schools in Chennai will be closed tomorrow
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நாளை சென்னைக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக, சென்னையில் 900 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ள 17 இடங்களைக் கண்டறிந்து முன்னெரிக்கையாக தேவையான உபகரணங்கள் உடன் முகாமிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் நாளை (அக்டாபர் 22) அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 22) விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Schools in Chennai will be closed tomorrow