சிரியாவில் மசூதி மீது தாக்குதல்; 'பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்கமுடியாது'; ஐநா கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ. நா. கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகையின் போது ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 08 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கொடூர சம்பவம் குறித்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். '' என்று  அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UN strongly condemns the attack stating that attacks on civilians and places of worship are unacceptable


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->