இந்தியாவை தொடர்ந்து சீனாவுக்கு வரி வீதிப்பு மிரட்டல்... NATO-வுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!
Following Indiathe tax rate threat to ChinaTrump urges NATO
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் இல்லையென்றால் சீனாவுக்கு 100% வரி விதியுங்கள் என்று NATO-வுக்கு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலை கண்டுகொள்ளவில்லை . இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார் டிரம்ப்.
இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷிய மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English Summary
Following Indiathe tax rate threat to ChinaTrump urges NATO