பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கி 13 பேர் பலி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி வழக்கத்திற்கும் அதிகமாக பலூசிஸ்தான், பஞ்சாப், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.

ஏற்கனவே பலூசிஸ்தான் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஜி கான், சாஹிவால் மற்றும் ராஜன்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்ததில் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

இந்நிலையில் சிந்து மாகாணத்தின் சுலைமான் மலைத்தொடரில் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆயிரத்துக்கும் அதிகமான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் இதுவரை சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் கன மழையால் பஞ்சாப் மாகாணத்தில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான தரை வழி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood in Pakistan sindhu province


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->