இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பதவியேற்றதும் முதல் உத்தரவே அதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, அநுராதபுரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இலங்கையின் 8-வது புதிய அதிபராக பதவியேற்றார். மேலும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள், நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவியில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினால், அவருடைய அமைச்சரவையும் தானாகவே கலைந்துவிடும் என்பதால், புதிய பிரதமராகத் தினேஷ் குணவர்த்தனேயை நியமித்து, புதிய அமைச்சரவையை கோத்தபய ராஜபக்சே நியமிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்ற உடனே, முதல் உத்தரவாக, அரசு அலுவலகங்களில் உள்ள முன்னாள் அதிபர் மற்றும் பிரதமர் படங்களை அப்புறப்படுத்த  உத்தரவிட்டுள்ளார். அந்த படங்களுக்கு மாற்றாக இலங்கை அரசின் சின்னங்களை அங்கே அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first order of srilankan president Gotabaya Rajapaksa


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal