'ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் பாஜ, மாநிலத்தில் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க விரும்புகிறது'; மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில்  திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் முகவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்குள்ள மைக்ரோபோன்கள் இயங்கவில்லை. இதனால் மம்தா அதிருப்தி அடைந்தார். அத்துடன், அங்கிருந்த போலீசார் ஏன் இதை கவனிக்காமல் உள்ளனர் என்றும் கடிந்து கொண்டார்.

அதன் பின்னர் அங்கு பேசிய மம்தா கூறுகையில்; இங்கு ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க பாஜ விரும்புகிறதாகவும், அவர்கள் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார்கள் என்று குற்றம் சுமத்தினார். 

அத்துடன், நேற்று பர்த்வானில் பீஹார் மாநில பதிவு எண்களைக் கொண்ட 50 பைக்குகள் டெலிவரி செய்யப்படுவதைக் கண்டதாகவும், தேர்தலுக்காக வெளியில் இருந்து மக்களை இங்கு அழைத்து வர முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து பூத் முகவர்களும் எஸ்ஐஆர் தொடர்பாக எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொகுதித் தலைவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The West Bengal Chief Minister alleges that the BJP wants to remove the names of one and a half crore voters


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->