தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92 ஆயிரத்து 626 பேர் விண்ணப்பம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்டோபர் 27-இல் தொடங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பு நடத்தப்பட்டது. 

எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 

பெயர் சேர்ப்புக்கு படிவம் 06 ஐ பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்கலாம். பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்போர், படிவம் 07, முகவரி மாற்றத்துக்கு படிவம் 08 ஆகியவற்றை வரும் ஜனவரி 18-ஆம் தேதிக்குள் வழங்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 82, 626 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த 03 நாட்களில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதாவது, நேற்று (டிசம்பர் 21) நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் மனு அளித்துள்ளதாகவும், அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த 19-ஆம் தேதி முதல் நேற்று வரை திமுக மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என இரண்டு விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதில், பெயர் சேர்ப்புக்கு 06 மற்றும 06 ஏ படிவங்களை நிரப்பி 92, 626 பேர் மனு கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 07 ஐ நிரப்பி 1007 பேர் மனு கொடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

92626 people have applied to add their names to the voter list in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->