ஆஸ்பிரின் மருந்தை தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


பெலிக்ஸ் ஹாஃப்மேன் :

ஆஸ்பிரின் மருந்தை தயாரித்தவரான பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1868ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள லூட்ஸ்விக்ஸ்பெர்க் என்ற ஊரில் பிறந்தார்.

சிறுவனாக இருந்த சமயத்தில் இவருடைய தந்தை மூட்டுவலியால் அவதிப்பட்டதை பார்த்து, படித்து முடித்ததும் அதற்கான மருந்தை 1897ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

முதலில் பவுடராகத் தயாரிக்கப்பட்ட இவரது மருந்து, பின்னர் மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த செலவில் தயாரிக்கும் முறையும் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலையிலும் விற்கப்பட்டது. உலகம் முழுவதும் அதிவேகமாக இது பிரபலமடைந்தது.

இதுவரை தயாரித்து விற்பனை செய்யப்பட்ட மருந்துகளிலேயே அதிகளவு வெற்றி பெற்றது ஆஸ்பிரின்தான் என்று கூறப்படுகிறது. (இம்மருந்து பொதுவாக சிறிய வலிகளுக்கு எதிரான வலிநீக்கியாக பயன்படுகிறது).

இந்த மருந்து நல்ல பலனையும் கொடுத்தது. இதன் வேதியியல் பெயர் அஸிடைல்சாலிசிலிக் ஆசிட் ஆகும். மருத்துவ மேதை பெலிக்ஸ் ஹாஃப்மேன் 1946ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

felix hoffmann birthday 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->