பொருளாதாரத்தை சீர் செய்ய உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு.! - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தை சீர் செய்ய உக்ரைனுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

ரஷ்யா உக்ரைனுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் சேதம் அடைந்து, 1000 கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் உக்ரைனின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. 

இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ்சில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ரஷ்யா படையெடுப்பால் சீர்குலைந்த உக்ரைனின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக, உடனடி பண புழக்க தேவைகளுக்கு 9 பில்லியன் யூரோ நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மிச்செல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU provides nine billion euro to ukraine


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->