பிரபல பாடகர் கொலை விவகாரம்.. வன்முறையில் 81 பேர் பலி...!! - Seithipunal
Seithipunal


எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க நாடாக இருந்து வருகிறது. இந்த நாட்டின் பிரபல பாடகராக ஹலூ ஹண்டிசா இருக்கிறார். இவர் கடந்த திங்கள்கிழமையன்று மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும், இவர் உள்நோக்கத்தோடு கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகிறது. 

மேலும், இவர் அங்குள்ள ஒரோமியா என்ற இனத்தினை சார்ந்தவராக இருந்து வரும் நிலையில், இவருக்காக ஒரோமியா இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்மக்கள் ஒரோமியா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். 

இதனால் அப்பகுதியியல் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்து வரும் சூழலில், பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் வைக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடிக்கவே, பல கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் போராட்டத்தில் சுமார் 81 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ethiopia Singer Hachalu Hundessa murder violence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal