புதின் எச்சரிக்கையும் மீறி உக்ரைனுக்கு யுரேனியம் குண்டுகளை அனுப்பும் இங்கிலாந்து - Seithipunal
Seithipunal


உக்ரைன் -ரஷ்யா போர் தொடக்கத்திலிருந்தே உக்ரைனுக்கு மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்கள் அளித்து உதவி வருகின்றன. மேலும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யப்படைகளின் முன்னேற்றத்தை தடுக்க, கவச பாதுகாப்பை துளையிடும் குறைக்கப்பட்ட யுரேனியம் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக இங்கிலாந்து அறிவித்தது.

இதையடுத்து யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய அதிபர் எச்சரிக்கையையும் மீறி உக்ரைனுக்கு கவச பாதுகாப்பை துளையிடும் 14 சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குறைக்கப்பட்ட யுரேனியத்திற்கும் அணு ஆயுதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், இது கதிரியக்கத் தன்மை கொண்டதல்ல எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ரஷ்ய வெளியுறவுதுறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைனுக்கு குறைக்கப்பட்ட யுரேனிய வெடிமருந்துகளை அனுப்புவது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதற்கு இங்கிலாந்து தயாராக உள்ளது என்று அர்த்தம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

England send uranium bomb despite Putin warning


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->