இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு முற்றுப்புள்ளி! டிரம்ப் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம் உலகம் முழுக்க பாராட்டுகள்...!
End Israel Hamas war Trumps peace deal is being praised around world
மத்திய கிழக்கு அமைதி முயற்சிக்காக மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசா-இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான இரண்டாண்டு போர் முடிவில், 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் கடந்த 11ம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதனை கண்காணிக்க 200 அமெரிக்க வீரர்கள், மேலும் எகிப்து, கத்தார், துருக்கி, அமீரகம் ஆகிய நாடுகளின் படையினரும் இணைந்துள்ளனர்.
மேலும், இஸ்ரேல், எகிப்து பயணத்தின் போது டிரம்ப், பணய கைதிகளின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் நடைபெற்ற வரலாற்று ஒப்பந்தத்தில், ஹமாஸ் ஆயுதக் கட்டுப்பாடு உள்ளிட்ட 21 அம்சங்கள் கையெழுத்திடப்பட்டன.
அதன்பின் ஹமாஸ் பிடித்திருந்த அனைத்து இஸ்ரேல் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இதனால், காசா மற்றும் இஸ்ரேல் இரு தரப்பினரும் நீண்டகால துயரத்துக்குப் பின் அமைதியின் ஒளியை நோக்கி நகர்ந்துள்ளனர்.
English Summary
End Israel Hamas war Trumps peace deal is being praised around world