அதிகாலை ஜப்பானை உலுக்கிய பூமி...! 6.2 ரிக்டர் நிலநடுக்கம் – மக்கள் பீதியில்
earthquake shakes Japan early morning 6point2 magnitude tremor people panic
ஜப்பானின் ஷிமானே மாகாணத்தை இன்று அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அதே பகுதியில் தொடர்ச்சியான சிறிய நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வால் அச்சமடைந்த பொதுமக்கள், வீடுகளில் தங்காமல் வெளியேறி சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர்

குறிப்பாக டோஹோகு நகரில், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சாலைகளில் திடீரென பள்ளங்கள் உருவாகி, அதில் சிக்கிய கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை, உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை; இருப்பினும் நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
earthquake shakes Japan early morning 6point2 magnitude tremor people panic