இன்று அதிகாலை ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.!! - Seithipunal
Seithipunal


ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்நாடு 4 டெக்டானிக் பிளேட்டுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் 20 சதவீதத்திற்கு அதிகமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்படுகிறது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியான இஷினோமகிக்கு தென்கிழக்கில் 45 கிலோ மீட்டரில் தொலைவில் இன்று காலை 6.57 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது .

63 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள், பொருள் சேதங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in japan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->