இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!
Earthquake in Indonesia
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவில் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் உள்ள ஒரு நாடாகும்.
அந்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு பபுவா மாகாணம் மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனேசியா நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 15 கிலோமீட்டர் ஆழத்திலும், அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்களோ அல்லது பொருள் சேதங்களோ குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் இந்தோனேசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.