கணவனின் மீதுள்ள ஆத்திரத்தால், டி.வி ரிமோட் வைத்து குழந்தையை கொலை செய்த தாய்..! - Seithipunal
Seithipunal


துபாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எகிப்து நாட்டினை சார்ந்த 44 வயது நபர், தனது 26 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது தொடர்கதையாகி வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று காலை நேரத்தில் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், கணவர் வேலைக்கு சென்றுள்ளார். கணவனின் மீது ஆத்திரம் குறையாத பெண்மணி, எரிச்சலுடன் வீட்டு வேலையை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது, குழந்தை திடீரென அழத் தொடங்கிய நிலையில், ஆத்திரத்தில் குழந்தையை அமைதிப்படுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் கணவரின் மீதுள்ள கோபத்துடன் கையில் கிடைத்த டி.வி ரிமோட்டை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். 

இதனால் குழந்தை சுருண்டு விழுந்து சிறிது நேரத்தில் பலியாகியுள்ளது. ஆத்திரத்தில் செய்ததை தாமதமாக உணர்ந்த பெண்மணி வீட்டில் இருந்து தப்பி செல்லவே, வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற கணவர் குழந்தை பலியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

மனைவி வீட்டில் இல்லாததை அடுத்து, மனைவியின் மீது காவல் நிலையத்தில் விஷயத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தலைமறைவாக இருந்த தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dubai Mother Killed Baby due to Fight with Husband 8 June 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->