ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை விதித்துள்ள டொனால்ட் டிரம்ப்; அதிர்ச்சியில் புடின்..!
Donald Trump imposes severe economic sanctions on Russia
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. குறித்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து, இது குறித்த செய்திகள், பேச்சுவார்த்தைகள் மற்றும் விவாதங்கள் அதிகம் நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை, ரஷ்யா மீது மிகப்பெரிய அளவில் பொருளாதார தடைகளையும், அதிகளவு வரிகளையும் விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், உடனடியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதற்காக சமீபத்தில் வெள்ளை மாளிகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட. ஜெலன்ஸ்கி உடனடியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். உலக அரசியல் வட்டாரங்களில் பரப்பப்பட பேசப்பட்டது.
இந்நிலையில், டிரம்ப் அறிக்கையில் ஒன்றை வெளியிட்டு, அதில் கூறியுள்ளதாவது: 'போர்க்களத்தில் உக்ரைனை கடுமையாக தாக்குகிறது. ரஷ்யா மீது பெரிய அளவில் வங்கி தொடர்பான தடைகள், பொருளாதார தடை மற்றும் வரி விதிக்கப் போகிறேன். அமைதி ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளும் வரையிலும், அமைதி ஏற்படும் வரையிலும் இந்த நடைமுறைகள் இருக்கும்.' என்று அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.
English Summary
Donald Trump imposes severe economic sanctions on Russia