16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை..எந்த நாட்டில் தெரியுமா?
Do you know which country has banned individuals under 16 from running a YouTube channel?
ஆஸ்திரேலிய அரசு, 16 வயதிற்கு குறைவானவர்கள் யூடியூப் சேனல் நடத்துவதைத் தடை செய்யும் என அறிவித்துள்ளது. இதன் மூலம், குழந்தைகள் யூடியூப் வீடியோக்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்; ஆனால் அவர்களுக்கென தனி சேனலை நடத்த முடியாது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தடை செய்தது.
ஆரம்பத்தில் யூடியூப் இந்த பட்டியலில் இல்லை. இப்போது அது சேர்க்கப்பட்டுள்ளது.டிசம்பர் 10 முதல் புதிய விதிகள் அமலில் வரும்.சமூக வலைதளங்கள், வயது குறைந்தவர்களின் கணக்குகளை நீக்கத் தவறினால் 33 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆஸ்திரேலிய தகவல் தொடர்புத்துறை மந்திரி அனிகா வெல்ஸ் கூறுகையில்:
"ஆஸ்திரேலியாவில் 10 குழந்தைகளில் 4 பேர் யூடியூப்பில் வரும் கருத்துகளால் மனநிலையிலும், நடத்தையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்ட மிரட்டல்களுக்கு அரசு அஞ்சாது என கூறினார் ."
இதேபோல பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகையில்:"இந்த நடவடிக்கைக்கு சர்வதேச ஆதரவைப் பெற, செப்டம்பரில் நியூயார்க் ஐ.நா. மன்றத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம். இது உலகளாவிய பிரச்சினை என கூறியுள்ளார்."
யூடியூப்பின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் (Alphabet) கூறுகையில்:"அரசின் நோக்கம் குழந்தைகளின் ஆன்லைன் பாதிப்புகளை குறைப்பது என்பதை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யூடியூப் என்பது சமூக ஊடகம் அல்ல; இது இலவச, உயர்தர உள்ளடக்க நூலகம். ஆஸ்திரேலிய அரசுடன் உரையாடுவோம் என தெரிவித்துள்ளார்."
இந்த சட்டம் இந்தியா போன்ற நாடுகளிலும் அமல்படுத்தப்பட வேண்டுமா? குழந்தைகளின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து சர்வதேச விவாதம் அதிகரித்து வருவதால், உலகளாவிய அளவில் இத்தகைய சட்டங்கள் பரவ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.
English Summary
Do you know which country has banned individuals under 16 from running a YouTube channel?