வலையில் சிக்கிய விசித்திரமான மீன்... ஆச்சரியத்தில் மீனவர்கள்..!  - Seithipunal
Seithipunal


ப்பப்பா... இந்த உலகத்தில் தான் எத்தனை எத்தனை விசித்திரமும், அதிசயங்களும் நிகழ்கிறது. உலகின் எதோ ஒரு மூலையில் நாம் இதுவரை காணாத விலங்குகளும், விசித்திரங்களும் இருக்கிறது. தற்போது சமூகவலைத்தளத்தில் வளர்ச்சியின் காரணமாக அது அனைத்தும் நம்மால் காண முடிகிறது. 

அந்த வகையில் சீனாவில் இருக்கும் கியுஸூ மாகாணத்தில், குயாங் என்னும் நகரில் வித்தியாசமான மீன் ஒன்று சிக்கியது. மீனவர் ஒருவர் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அவரது வலையில் புறாவின் தலைபோல் அமைப்பு கொண்ட மிகவும் வித்தியாசமான மீன் ஓன்று சிக்கியுள்ளது. உடனே அவர் மற்றவர்களை அழைத்து இது குறித்து தெரிவித்திருக்கிறார். 

இதை கேட்ட மற்றவர்கள், என்னது புறாவின் தலைபோல் மீனா? என்று மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. அந்த மீனை தண்ணீரில் வைக்காமல் வெளியில் வைத்து பார்த்து கொண்டிருந்ததால், இந்த மீன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளது. இருப்பினும் இந்த வகை விசித்திர மீனைக் கண்ட அந்த பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

different head fish in china


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->