சி.எஸ்.கே vs ராஜஸ்தான் போட்டியின் இடையே கண் கலங்கியது ஏன்? ரவீந்திர ஜடேஜா விளக்கம்
Why was there a lot of eye strain during the CSK vs Rajasthan match Ravindra Jadeja explains
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நீண்டநாள் முக்கிய வீரராக விளங்கிய ரவீந்திர ஜடேஜா, 2025 ஐபிஎல் தொடருக்கு பின்னர் டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். இந்த மாற்றம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்தது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணிக்காக ஜடேஜா களமிறங்கினார். தனது பழைய அணியை எதிர்கொண்ட அவர், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே வழங்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் போது, பவுண்டரி அருகில் நின்றுகொண்டிருந்த ஜடேஜா கண்கலங்கிய தருணமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து போட்டி முடிந்த பின் அவர் விளக்கம் அளித்தார்.
“கடந்த 12-13 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியுடன் பயணித்தேன். அந்த அணியை விட்டு பிரிவது எளிதல்ல. அதனால் மைதானத்தில் சற்று உணர்ச்சி வசப்பட்டேன். ஆனால் வாழ்க்கையில் மாற்றங்கள் இயல்பானவை என்பதை நினைத்து என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்,” என்று ஜடேஜா தெரிவித்தார்.
மேலும், “நான் முதலில் கோப்பை வென்ற அணியான ராஜஸ்தான் அணிக்குத் திரும்பியதும் ஒரு நல்ல விஷயமாகவே பார்க்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
இந்த உணர்ச்சி மிக்க தருணம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
English Summary
Why was there a lot of eye strain during the CSK vs Rajasthan match Ravindra Jadeja explains