சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயங்கரமான 'சூப்பர் பக்' பாக்டீரியா - என்ன ஆச்சு சுனிதா வில்லியம்ஸூக்கு?? - Seithipunal
Seithipunal



கடந்த ஜூன் 5ம் தேதி நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் மற்றும் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணத்தை தொடங்கினர்.

சுமார் 25 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஜூன் 6ம் தேதி அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இந்த ஸ்டார்லைனர் விண்கலத்தை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 'சூப்பர் பக்' எனப்படும் ஒரு பயங்கரமான பாக்டீரியா கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பாக்டீரியாவானது சுவாச மண்டலத்தை பாதிக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 

பூமியில் இருந்து பயணித்து இந்த பாக்டீரியாக்கள் விண்வெளிக்கு சென்றுள்ளன. இவை விண்வெளி நிலையத்தின் மூடப்பட்டுள்ள சூழலில் மிகவும் ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. 

இந்த சூப்பர் பக் பாக்டீரியாவால் சுனிதா வில்லியம்ஸ் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் இந்திய மக்களுக்கு எழுந்துள்ளது. முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திற்கு தன் வீட்டில் இருப்பது போல் உணர்வதற்காக தன்னுடன் மீன் குழம்பையும் எடுத்து சென்றதாக கூறப்பட்டது அனைவரையும் ரசிக்க வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dangerous Super Bug Bacteria Found in Internatioanl Space Station


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->