ரஷ்யாவுடன் இணைந்து செயல்படும் ஒபெக் கூட்டமைப்பு.! அமெரிக்காவிற்கு ஏமாற்றம்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. உக்ரைன், ரஷ்ய போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், நேற்று சவுதி அரேபியா தலைமையிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தியை குறைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில், நவம்பர் மாதம் முதல் எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் குறைக்கப்படும். கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்திருப்பதால், சர்வதேச அளவில் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து அமெரிக்கா தெரிவித்ததாவது, ரஷியாவுடன் இணைந்து செயல்படுவது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அமெரிக்கா இது ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. ரஷியாவுடன் இணைந்து 'கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்  செயல்படுவது தெளிவாக தெரிகிறது. 

உக்ரைன் மீது நடத்தும் ரஷியாவின் போரால் லகம் கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கையால் அமெரிக்கா பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளது. 

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ள ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின் முடிவால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் அதிகமான பாதிப்பை சந்திக்கும். 

இதுகுறித்து, அதிபர் பைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் படி, "அடுத்த மாதம் முதல் நாட்டின் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் இருந்து 10 மில்லியன் பாரெல் எண்ணெய் கூடுதலாக வெளியேற்றும்படி அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம், எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crude oil producction decrease


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->