ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்யாவில் பெப்சி, கோக் விற்பனையை நிறுத்திய நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவில் பெப்ஸி மற்றும் கோகோ கோலா குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதனைத்தொடர்ந்து பிரபல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இன்டல், எச்பி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதில், டிக் டாக் மற்றும் நெட்பிளிக்ஸ் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்திக் கொள்வதாக  அறிவித்திருந்த நிலையில், நேற்று ஐபிஎம் நிறுவனம் வணிக நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து மெக்டோல்ட் மற்றும் காபி ஹவுஸ் எனும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் ரஷியாவில் தங்களது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக, ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அதிரடியாக அறிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coca cola and Pepsi sales stopped in Russia


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->