சினிமாவில் வாய்ப்புத் தருவதாக இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மார்ட்டின் செபாஸ்டின். திரைப்படத் தயாரிப்பாளரான இவர் மலையாள திரையுலகில் பல படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், இவர் மீது திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளதாவது, "கடந்த 2000-ம் ஆண்டு மார்ட்டின் செபாஸ்டின் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்து சென்று தன்னை கற்பழித்துள்ளார்" என்று அதில் தெரிவித்துள்ளார்.  

இந்த புகாரின் பேரில், போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு மார்ட்டின் செபாஸ்டின் மறுப்புத் தெரிவித்து, இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், செபாஸ்டின் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து போலீசார் மார்ட்டின் செபாஸ்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். 

சுமார் 72 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். பாலியல் புகாரில் சினிமா தாயரிப்பாளர் மார்ட்டின் செபாஸ்டின் கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinema producer Martin Sebastian arrested for sexual harassment case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->