சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: உயிரோடு புதைந்த மக்களின் கதி? மீட்புக்குழு தீவிரம்! - Seithipunal
Seithipunal


சீனா, தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஜாவோடோங் நகரில் உள்ள ஒரு கிராமம் புதைந்து விட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வீடுகள் மண்ணில் புதைந்து விட்டதால் அதில் சிக்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

18 குடும்பத்தை சேர்ந்த 47 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

200 மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் நிலச்சரிவிற்கான காரணமும் தெரிவிக்கவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China sudden landslide rescue team serious


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->