கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கு உத்தரவு நீக்கம்.!! - Seithipunal
Seithipunal


உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு 82 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,005 ஆக அதிகரித்து உள்ளது.

209 நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,30,516 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,828 ஆக அதிகரித்து உள்ளது.

சீனாவில் கொரோனாவால் 3,331 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,708 ஆக உயர்ந்துள்ளது.  77,078 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், 76 நாட்களுக்கு பின் சீனாவின் வுகானில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. உலகளவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கை தளர்த்திக் கொண்டது சீன அரசு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china lockdown loosen


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal