சீனா சுற்றுலா தளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு.! சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பு - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சீன அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சன்யா தீவில், ஒரே நாளில் மட்டும் 483 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சீன அரசு உடனடியாக தீவில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் சுமார் 80,000 சுற்றுலா பயணிகள் ஒரு வாரத்திற்கு வெளியேற முடியாமல் தீவில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் ஒரு வாரத்திற்குள் 5 கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்று உறுதி செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஊரடங்கு முடியும் வரை சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் விடுதிகளில் 50% தள்ளுபடியில் தங்க வைக்க சீன அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China imposes lockdown in island due to increase of covid


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->