பாகிஸ்தான் கடற்படைக்கு 2 மல்டி-ரோல் கப்பல்களை வழங்கிய சீனா.! காரணம் என்ன.? - Seithipunal
Seithipunal


2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா 4 மல்டி-ரோல் 045 எ/பி வகை போர்க்கப்பல்களை வழங்க ஒப்புதல் அளித்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டு பி.என்.எஸ் துக்ரில் மற்றும் பி.என்.எஸ் தைமூர் போர்க்கப்பல்களை சீனா பாகிஸ்தானிற்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட 045 எ/பி வகை போர்க்கப்பல்களான பி.என்.எஸ் டிப்பு சுல்தான் மற்றும் பி.என்.எஸ் ஷாஜகான் கப்பல்களை நேற்று முன் தினம் சீனா பாகிஸ்தான் கடற்படைக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி, பி.என்.எஸ் டிப்பு சுல்தான் மற்றும் பி.என்.எஸ் ஷாஜஹான் ஆகிய கப்பல்கள் பாக்-சீனா நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கப்பல்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் 045 எ/பி வகை போர்க்கப்பல்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் அதிக திறன் கொண்டவை என்றும் நில தாக்குதல், மேற்பரப்பிலிருந்து வான் மற்றும் நீருக்குள் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் அம்சங்களை கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China gives two new brigade ships to Pakistan


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->