சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிர் பலி! - Seithipunal
Seithipunal


சீனா வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. 

சீனா கான்சு மாகாணம் ஜிஷிஷன் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.2 அலகுகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தினால் அருகில் உள்ள மக்கள் கின்காய் மாகாணமும் குலுங்கியதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் கான்சு மாகாணத்தில் மட்டும் 117 பேர் உயிரிழந்தனர். கிங்காய் மாகாணத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 2014 ஆம் ஆண்டு சீனா யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 617 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு பிறகு சீனாவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Earthquake increases death 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->