சிலி காட்டுத்தீ: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்கா, சிலியில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. 

சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட காட்டு தீயால் சுமார் 1100 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. 

கோடைகாலம் என்பதாலும் காற்று பலமாக வீசியதாலும் தீ வேகமாக பரவி 26 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். கோடை காலம் என்பதால் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதே இந்த விபத்திற்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக அந்நாட்டு அதிபர், நாட்டு மக்கள் அனைவரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இருப்பிடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டால் உடனடியாக அதனை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chile wildfires Death rises 112


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->