32 வருடத்திற்கு பின்னர் பெற்றோரை சந்தித்த மகன்... நெகிழ்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஷான்சி மாகாணத்தின் சியான் நகர் பகுதியை சார்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி-ஜின்க்சு. இவரது மகனின் பெயர் மாவோ இன். மாவோ இன் கடந்த 1988 ஆம் வருடத்தின் அக்டோபர் 17 ஆம் தேதி தனது தந்தையுடன் மழலையர் பள்ளிக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் சிறுவனிற்கு தண்ணீர் தாகம் எடுக்கவே, இது குறித்து தந்தையிடம் தெரிவித்துள்ளான். 

இதனையடுத்து மாவோவின் தந்தை அங்குள்ள அங்குள்ள உணவகத்திற்கு அழைத்து சென்ற நிலையில், மாவோ திடீரென மாயமாகியுள்ளார். பின்னர் மாவோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் குழந்தை கடத்தல் கும்பலால் சிறுவன் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தங்களின் ஆசை மகனை துழைத்துவிட்டு மனதளவில் ஏற்க இயலாமல் மாவோவின் தாயார் லி ஜிக்ஷு, தனது பணியை துறந்துவிட்டு மகனை தேடும் பணிகளில் முழு வீச்சாக ஈடுபட்டார். சீனா முழுவதும் இருக்கும் 10 க்கும் அதிகமான மாகாணத்திலும், சிறிய நகரிலும் என தொடர்ந்து பயணம் செய்து, மகன் தொடர்பான 1 இலட்சம் நோட்டீஸ்களை வழங்கியும் பலன் இல்லை.

இதன்பின்னர், கடந்த 2007 ஆம் வருடத்தில் "குழந்தையே வீட்டிற்கு வா" என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்திய லி ஜிக்ஷு, மகனை தேடி வந்துள்ளார். இதே அமைப்பின் மூலமாக குடும்பத்தை பிரிந்த 29 சிறுவர்கள் குடும்பத்தினருடன் இணைந்த நிலையில், சிறுவன் மாவோ கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் குழந்தையை தேடும் முயற்சியில் முழு முனைப்புடன் லி ஜிக்ஷு ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்த சமயத்தில், காவல் துறையினர் சிறுவன் மாவோ இன் அங்குள்ள சிசுவான் மாகாணத்தில் இருப்பதாக கடந்த மாதம் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தாய் மற்றும் மகனிற்கு மரபணு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மாவோ தனது பெற்றோர்களுடன் சுமார் 32 வருடத்திற்கு பின்னர் இணைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

child kidnap 3 years old, meet after 32 years with his parents


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->